முழுமையாக இருளில் மூழ்கும் நாடு!

முழுமையாக இருளில் மூழ்கும் நாடு!

தென்னாப்பிரிக்கா,
தென்னாப்பிரிக்கா மீண்டும் மின்வெட்டுப் பிரச்சினையை எதிர்கொள்கிறது. பழைமையான உள்கட்டமைப்புகள் முறையாகப் பராமரிக்கப்படாததே அதற்குக் காரணம் என்று அரசாங்கப் பயனீட்டு நிறுவனமான Eskom தெரிவித்தது.

வரும் வாரங்களில் மின்வெட்டு குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே ஏற்படும் என நிறுவனத்தின் தலைவர் ஆன்ரே டி ரைட்டர் (Andre de Ruyter) கூறினார்.

மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அவர் வலியுறுத்தினார். இரவு நேரங்களில் அலுவலக விளக்குகளை அணைப்பதோடு, உச்ச நேரங்களில் நீச்சல் குளங்களின் குழாய்களையும் வெந்நீர்க் கருவிகளையும் பயன்படுத்த வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

“அனைவரும் பங்களித்தால், மின்சாரத்திற்கான தேவையைக் கையாள முடியும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பெரிய அளவிலான திறம்பட்ட உற்பத்தி நிலையத்தை உருவாக்குவதற்குச் சற்றுக் காலம் எடுக்கும் என்றும் டி ரைட்டர் தெரிவித்தார்.

இதற்கிடையே, தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமஃபோசா (Cyril Ramaphosa) எலிசபெத் அரசியாரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள லண்டன் சென்றுள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் நிலவும் மின்சாரப் பற்றாக்குறையைக் கையாள அதிபர் விரைவில் நாடு திரும்புவார் என அவரது பேச்சாளர் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

Leave a Reply