ஷூ வுக்குள் ரகசிய கேமரா வைத்திருந்த டாக்டர்….சோதித்ததில் வெளியான அதிர்ச்சி …

ஷூ வுக்குள்  ரகசிய கேமரா வைத்திருந்த டாக்டர்….சோதித்ததில் வெளியான அதிர்ச்சி …

சிங்கப்பூர்;

சிங்கப்பூரைச் சேர்ந்தவர் ஜூ பென் வி. இவர் அந்த பகுதியில் பிரபல மருத்துவராக இருந்து வந்தார். இந்த நிலையில் இவர் மீது கடந்த 2020-ம் ஆண்டு ஒரு பெண் தனது அந்தரங்க வீடியோக்கள் வைத்திருப்பதாக புகார் கொடுத்தார்.

அதன்பேரில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் அவரை விசாரித்தனர். அப்போது அவரது காலனியில் (ஷூ) இரகசிய கேமரா ஒன்றை பொருத்தி, மருத்துவமனை, மால்கள், கல்லூரிகள், இரயில் நிலையம் என பெண்கள் அதிகம் கூடும் பொது இடங்களுக்கு சென்று அவர்களது வீடியோக்களை பதிவு செய்து வந்துள்ளார்.

ஷூ வுக்குள் ரகசிய கேமரா வைத்திருந்த டாக்டர்….

சோதித்ததில் வெளியான அதிர்ச்சி …அதிலும் குறிப்பாக அவர் குட்டைப்பாவாடை போடும் பெண்களை குறிவைத்து அவர்களது அந்தரங்க வீடியோக்களை எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது அறையில் சோதனை செய்தபோது சுமார் 3200-க்கும் மேற்பட்ட பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது.

இந்த நிலையில் தற்போது அவரது பெயர் மருத்து பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் மருத்துவக் கவுன்சிலுக்கான (SMC) ஒழுங்குமுறை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் அந்த மருத்துவரின் லைசென்ஸ் தடை செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள SMC, ”பல சந்தர்ப்பங்களில் இதுமாதிரியான குற்றச்செயல்களில் ஈடுபட்ட மருத்துவர் ஒருவரை தொடர்ந்து தொழில் ரீதியில் அனுமதிப்பது மக்கள் மத்தியில் எதிர்மறை விமர்சனங்களை உண்டாக்கும். அதனால் அவரது லைசென்ஸ் ரத்து செய்யப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளது. ஒரு டாக்டரே இது போன்ற செயலுள் ஈடுபட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது ..

Leave a Reply