கோவை மாநகராட்சி பிரதான சாலையில் வந்த பஸ் பள்ளத்தில் இறங்கியது …ஸ்மார்ட் சிட்டி சாலைகளின் லட்சணம் ..

கோவை மாநகராட்சி பிரதான சாலையில் வந்த பஸ் பள்ளத்தில் இறங்கியது …ஸ்மார்ட் சிட்டி சாலைகளின் லட்சணம் ..

கோவை ;

கோவை தடாகம் சாலையில் சிவாஜி காலனி முதல் கே.என்.ஜி. புதூர் வரை குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாநில நெடுஞ்சாலையான தடாகம் சாலையின் பல்வேறு இடங்களில் குழாய்கள் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு உள்ளதால், சாலை குண்டும் குழியுமாக காட்சியளித்து வருகிறது.

இந்த நிலையில், தடாகம் சாலையில் இடையர்பாளையம் அருகே உள்ள தனியார் பள்ளி முன்பு கடந்த 2 நாட்களுக்கு முன் பள்ளம் தோண்டப்பட்டு குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு இருந்தன. எனினும் குழாய் பதிப்பு பணி தொடர்பாக அந்த பகுதியில் முறையான அறிவிப்பு வைக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

ஸ்மார்ட் சிட்டி சாலைகளின் லட்சணம் .

இந்த நிலையில், இன்று காலை அந்த வழியாக சென்ற தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக பள்ளத்திற்குள் சிக்கிக்கொண்டது. இதனை அடுத்து, பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கிவிடப்பட்டனர்.

பின்னர் கிரேன் வாகனம் மூலம் பேருந்தை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சாலை பள்ளத்தில் பேருந்தில் சிக்கிக் கொண்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேர் தான் ஸ்மார்ட் சிட்டி ஆனால் கோவை மாநகராட்சிகளில் பல பிரதான சாலைகளும் இதே மோசமான நிலையில் தான் இருந்து வருகிறது ..இன்னும் எத்தனை பஸ்கள் இது போல பள்ளத்தில் விழ காத்திருக்கின்றனவோ என்று பொது மக்கள் பேசி கொள்கின்றனர் ..

Leave a Reply