ஆவின் பால் பாக்கெட்டில் கிடந்த ‘ஈ’.. பொது மக்கள் அதிர்ச்சி …

ஆவின் பால் பாக்கெட்டில் கிடந்த  ‘ஈ’.. பொது மக்கள் அதிர்ச்சி …

மதுரை ;

தமிழகத்தில்  ஆவின் நிறுவனத்தின் மூலம் சென்னை,  மதுரை, சேலம் என நாடு முழுவதில் இருந்தும்   நாள் ஒன்றுக்கு 25 லிட்டர் லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது.  ஆவினில்  விற்பனை செய்யப்படும் பால் பாக்கெட்டுகள் தொடர்பாக அவ்வப்போது புகார்கள் வருகின்றன.

மதுரையில் நாள் ஒன்றுக்கு 5  லட்சத்திற்கும் அதிகமான பால் பாக்கெடுக்கள் தயார் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகின்றன. மதுரையில்  40க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெப்போக்களுக்கு இவை வினியோகம் செய்யப்படுகின்றன.

அந்தவகையில்  ஆரப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட, 33வது வழித்தடத்தில் வேன் மூலம் நாகமலை புதுக்கோட்டை, மதுரை காமராஜ் பல்கலை, கீழமாத்துார் உள்ளிட்ட டெப்போக்களில் ஆவின்  பால் பாக்கெட்டுகள் வினியோகிக்கப்படுகின்றன. 

ஆவின் பால் பாக்கெட்டில் கிடந்த ‘ஈ’.

அதன்படி காமராஜர் பல்கலைக்கு அருகே உள்ள டெப்போவில்  விநியோகிக்கப்பட்ட  பால் பாக்கெட்டில் ‘ஈ’ இறந்து மிததுள்ளது. 

பெண் நுகர்வோர் வாங்கிய  அரை லிட்டர் எஸ்.எம்., பச்சை நிற  பால்  பாக்கெட்டிற்குள், ‘ஈ’ இறந்து தகவலறிந்து  நிகழ்விடத்திற்கு வந்த  ஆவின் அதிகாரிகள், அந்த பாக்கெட்டை பெற்றுக்கொண்டு , ஈ மிதக்கும் பால் பாக்கெட் குறித்த வீடியோ, போட்டோ இருந்தால் வெளியிட வேண்டாம்’  என்று   டெப்போ உரிமையாளரிடம் அறிவுறுத்தி சென்றுள்ளனர். இந்த சம்பவம் பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்ப்படுத்தியுள்ளது .

Leave a Reply