கார் நிறுவனத்திற்க்கு சென்று  மிரட்டல் விடுத்த திமுக எம்எல்ஏ … வழக்கு பதிந்த போலீஸ்…

கார் நிறுவனத்திற்க்கு சென்று  மிரட்டல் விடுத்த திமுக எம்எல்ஏ … வழக்கு பதிந்த போலீஸ்…

சென்னை:

தாம்பரம் திமுக எம்எல்ஏ எஸ்.ஆர். ராஜா மீது மறைமலைநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தாம்பரம் திமுக சட்டசபை உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா செங்கல்பட்டில் சிங்கபெருமாள் கோயில் அருகே மல்ரோசாபுரத்தில் உள்ள தனியார் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு சென்றார்.

அங்கு பணியாற்றும் ஊழியர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி அவர் மிரட்டல் விடுப்பது போன்ற வீடியோ வெளியானது. அதில் கை, கால்களை உடைத்து விடுவேன் என ஊழியர்களை மிரட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

ஒரு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் , “தன்னை யாரும் சாப்ட் முதல்வர் என கருதி விட வேண்டாம். நான் தேவைப்பட்டால் சர்வாதிகாரியாக மாறுவேன்” என எச்சரிக்கை விடுத்திருந்தார். தற்போது ஆளும் கட்சி எம்எல்ஏவே அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார் என பாஜகவினர், அதிமுகவினர் இந்த வீடியோவை வைரலாக்கினர்.

கார் நிறுவனத்திற்க்கு சென்று  மிரட்டல் விடுத்த திமுக எம்எல்ஏ

இந்த நிலையில் ஆலையின் சிஇஓ கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் பேரில் எம்எல்ஏ எஸ்.ஆர். ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2006, 2016 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தல்களில் தாம்பரம் தொகுதியில் போட்டியிட்ட ராஜா வெற்றி பெற்றார்.

அது போல் 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் அவருக்கே வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் அந்த தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இவர் தாம்பரம் மாநகர திமுக செயலாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார் நிறுவனத்திற்கு சென்று ஆளும் கட்சி எம் எல் ஏ ஒருவர் மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது …

Leave a Reply