நாக்கை அறுத்தால் ஒரு கோடி பரிசு… உணர்ச்சிவசப்பட்டு வார்த்தையை விட்டவரை ரவுண்டு கட்டிய போலீஸ்….

நாக்கை அறுத்தால் ஒரு கோடி பரிசு… உணர்ச்சிவசப்பட்டு வார்த்தையை விட்டவரை ரவுண்டு கட்டிய போலீஸ்….

மதுரை ;

அண்மையில் திராவிடர் கழக தலைவர்  வீரமணிக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய திமுக எம்பி ஆ. ராசா,  இந்து மதம் குறித்து மிகவும் அவதூறாக பேசி விட்டதாக இந்துக்கள் கொதித்தெழுந்து உள்ளனர்.  

பாஜகவினர் தமிழகமும் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் ஆ.  ராசாவை கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்து வருகின்றனர்.  ஆ.  ராசாவை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை , பாஜக மூத்த தலைவர் எச். ராஜா உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர்.

நாக்கை அறுத்தால் ஒரு கோடி பரிசு

இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த பசுக்காரன்பட்டியில் வசித்து வருகிறார் கண்ணன்.  இவர் தனது முகநூல் பக்கத்தில்,  இந்திய திருநாட்டில் செய்த சத்திய பிரமாணத்தை மறந்து அந்நிய நாட்டின் கைக்கூலி போல் செயல்படும் திமுக எம்பி ஆ. ராசாவை வன்மையாக கண்டிக்கிறோம்.  

இந்துக்களை விபச்சாரிகள் எனக் கூறி வரும் அரசியல் விபச்சாரியே… இந்த அரசியல் விபச்சாரியின் நாக்கை அறுத்துக் கொண்டு வரும் காவி ஆண் மகனுக்கு ஒரு கோடி ரூபாய் பணமும்,  ஒரு ஏக்கர் நிலமும் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

  உணர்ச்சிவசப்பட்டு வார்த்தையை விட்டவரை ரவுண்டு கட்டிய போலீஸ்

இதை அடுத்து திமுகவினர் அளித்த புகார் -ன் பேரில் உத்தப்ப நாயக்கனூர் போலீசார் கண்ணனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply