380 விருதுகள் பெற்ற ‘‘சிதை’’
திரைப்படமாகிறது

380 விருதுகள் பெற்ற ‘‘சிதை’’திரைப்படமாகிறது

கோவை,
இயக்குநர் கார்த்திக்ராம் இயக்கிய சிதை என்னும் குறும்படம் திரைப்படமாகிறது. சர்வதேச அளவில் 380 விருதுகள் குவித்த குறும்படமான சிதையை திரைப்படமாக எடுக்கும் இயக்குநர் கார்த்திக் ராம் நமது தினபறவை இதழுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:


பெண்களின் உறுப்பு சிதைத்தலை மையமாக கொண்டு எடுத்த குறும்படமான சிதையை திரைப்படமாக எடுக்க திரு.தன்ராஜ் அவர்கள் தயாரிக்க முன் வந்த நிலையில் கடந்த மே 25&ல் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது.


படப்பிடிப்பு கொடைக்கானல் பெருங்காடு என்னும் கிராமத்தில் எடுக்கப்பட்டு 22 நாட்களில் படப்பிடிப்பை நிறைவு செய்தோம்.


விரைவில் டைட்டில் மற்றும் இசை வெளியிட்டு விழா நடைபெறும். மேலும் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் நடிகர் கமல் அவர்கள் தன்னுடைய படங்களில் நடிப்பவர்களுக்கு நடிப்பு பயிற்சி கொடுத்த பின்பு படப்பிடிப்பை தொடங்குவார்.

அதே போல நாங்களும் இந்த திரைப்படத்தில் நடிப்பவர்களுக்கு நடிப்பு பயிற்சி கொடுத்த பின்பு படப்பிடிப்பை ஆரம்பித்தோம் என்றார்.


இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த ‘‘சிதை’’ என்னும் குறும்படம் திரைப்படமாக வெளிவந்து வெற்றியடைய தினபறவை சார்பாக வாழ்த்துகிறோம்…..

Leave a Reply