மல்லிகைப் பூவில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா..?

மல்லிகைப் பூவில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா..?

மல்லிகை பூவை கொதிக்க வைத்து தேன் அல்லது பனங்கற்கண்டு கலந்து குடித்துவர சிறுநீரகப் பிரச்னை, வயிற்று கோளாறுகளை சரிசெய்ய உதவும்.

மல்லிகை பூ கோடைக்காலத்தில் பத்து ரூபாய்கே முழம் முழமாகக் கிடைக்கக் கூடியது. அதை தலையில் சூடிக்கொள்ளவும், தெய்வ வழிபாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தும் பலருக்கும் அதில் மருத்துவ குணங்களும் உள்ளன என்பது தெரியுமா..?

மல்லிகை பூவை கொதிக்க வைத்து தேன் அல்லது பனங்கற்கண்டு கலந்து குடித்துவர சிறுநீரகப் பிரச்னை, வயிற்று கோளாறுகளை சரிசெய்ய உதவும். அஜீரணப் பிரச்னைகள் இருக்காது. வயிற்றில் புழுக்கள் இருந்தாலும் அதை அழித்திவிடும்.

மல்லிகைப் பூவை நிழலில் காய வைத்து அதை பொடியாக்கி வெந்நீரில் கலந்து குடித்தால் சிறுநீரகக் கல் கரையும். அதோடு நீர் சுருக்கு, சிறுநீர் பாதையில் எரிச்சல் இருந்தாலும் குணமாகும்.
.

நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் மல்லிகைப் பூவை காய வைத்து பொடியாக்கி தேனில் குழைத்து இரு ஸ்பூன் சாப்பிட குணமாகும்.

பெண்களுக்கு கருப்பைப் பிரச்னைகள், கருப்பை வலுபெறவும் மல்லிகைப் பொடியை தேனில் குழைத்து சாப்பிடலாம். மாதவிடாய் சீராக வருவதற்கும் மல்லிகைப் பூ உதவும்.

மல்லிகை எண்ணெய்யை வாங்கி தழும்புகள், புண், அரிப்பு , சரும அலர்ஜிக்கு தடவினால் குணமாகும்.

மல்லிகைப் பூக்களை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி, சளி, மூக்கடைப்பு, மூச்சுத் திணறல், போன்ற பிரச்னைகளும் வராதாம்.

பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் கட்டிக்கொண்டால் மல்லிகைப் பூவை அரைத்து அதை மார்பகங்களில் பத்து போட்டால் உடனே பால் கரைந்து வெளியேறிவிடும்.

மல்லிகை எண்ணெய்யின் மணம் மன அழுத்தத்தை குறைக்க உதவுமாம். ஆழ்ந்த தூக்கத்தையும் வரவழைக்கும். எனவே தூங்கும் முன் கொஞ்சம் கைகளிலோ அல்லது மல்லிகை எண்ணெய் விளக்கு ஏற்றி வைத்து அந்த வாசனையை வீடு முழுவதும் பரப்பினால் நன்மைகள் கிடைக்கும்.

உடலுறவுக்கும் மலிகை எண்ணெய் உதவுமாம். அதாவது இது செக்ஸ் ஆசையை தூண்டுவதில் மல்லிகைக்கு னிகர் எதிவும் இருக்க முடியாது. அதனால்தான் பெண்கள் தலையில் மல்லிகை பூ வைத்தாலே ஆண்களை ஈர்க்கிறது.

Leave a Reply