முழு போதையில் கிளாஸ் ரூமில் மாணவர்கள் முன் டான்ஸ் ஆடிய பேராசிரியர்…பரபரப்பு வீடியோ
புதுடெல்லி
பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள குருநானக் தேவ் கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டார். ரவீந்தர் குமார் என்ற பேராசிரியர் முழு போதையில் வகுப்பறைக்கு வந்து மாணவர்கள் அருகே பாட்டிலில் இருந்து மது அருந்திக்கொண்டே நடனமாடியுள்ளார்.
அவர் ஒரு பஞ்சாபி திரைப்படப் பாடலுக்கு நடனமாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பேராசிரியர் தனது சொந்தப் பணத்தில் மது அருந்துவதாகவும், தன்னை யாரும் கேள்வி கேட்க முடியாது என்றும் கூறுகிறார்,
முழு போதையில் கிளாஸ் ரூமில் மாணவர்கள் முன் டான்ஸ் ஆடிய பேராசிரியர்
இவர் கணித பேராசிரியராக பணியாற்றி வருவதாக தெரிகிறது. இந்த வீடியோ வெளியானதையடுத்து, அவரை கல்லூரி நிர்வாகம் பணி நீக்கம் செய்து உள்ளது. ஆனால் பேராசிரியர் தான் குடிபோதையில் எதையும் செய்யவில்லை என்றும் வேடிக்கைக்காக செய்தேன் என்றும் கூறியுள்ளார்’.
ஒழுக்கத்தை சொல்லி கொடுக்கும் பேராசிரியர் ஒருவரே மாணவர்கள் முன்பு குடிபோதையில் ஆட்டம் போட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ..