உடல்நலகுறைவால் அவதிப்பட்டு வரும் காமெடி நடிகரின் சிகிச்சைக்கான செலவு முழுவதும் அரசே ஏற்கும்”… தமிழக அமைச்சர் அறிவிப்பு …

உடல்நலகுறைவால் அவதிப்பட்டு வரும் காமெடி நடிகரின் சிகிச்சைக்கான செலவு முழுவதும் அரசே ஏற்கும்”… தமிழக அமைச்சர் அறிவிப்பு …

சென்னை ;

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் போண்டாமனி. இவர் வடிவேலுவுடன் அதிகமான படங்களில் இணைந்து நடித்துள்ளார். ‘ரன்’, ‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘வின்னர்’ போன்ற படங்களில் போண்டாமணி நடித்துள்ளார்.

இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் போண்டாமணி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், “இரண்டு கிட்னியும் செயல் இழந்து சிகிச்சைப் பெற்று வரும் நடிகர் போண்டாமணிக்கு உதவ வேண்டும்” என சக நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க பேசிய வீடியோ இணையத்தில் பரவி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

இதையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நடிகர் போண்டாமணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, மருத்துவர்களிடம் சிகிச்சைக் குறித்துக் கேட்டறிந்தர்.

இதையடுத்து “சிகிச்சைக்கான செலவு முழுவதையும் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஏற்கும்” என நடிகர் போண்டாமணியிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்தார்.

Leave a Reply