பிரதமரோ, குடியரசு தலைவரோ கூட உங்களை காப்பாற்ற முடியாது… முதல்வரை எச்சரித்த பிரபல நடிகர் …

கொல்கத்தா;

குற்றம் செய்ததற்கு ஆதாரம் இருந்தால் பிரதமரோ, குடியரசு தலைவரோ கூட உங்களை காப்பாற்ற முடியாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை பா.ஜ.க.வின் மிதுன் சக்கரவர்த்தி எச்சரிக்கை செய்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகரும், பா.ஜ.க.வை சேர்ந்தவருமான மிதுன் சக்கரவர்த்தி நேற்று கொல்கத்தாவில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: திரிணாமுல் காங்கிரஸை  சேர்ந்த 21 எம்.எல்.ஏ.க்கள் இன்னும் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள். இதை நான் முன்பே சொன்னேன். மீண்டும் சொல்கிறேன். நான் என் கருத்தில் நிற்கிறேன். நேரத்திற்காக காத்திருங்கள்.

பிரதமரோ, குடியரசு தலைவரோ கூட உங்களை காப்பாற்ற முடியாது…

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை எடுப்பதில் கட்சிக்குள் (பா.ஜ.க.) ஆட்சேபனைகள் இருப்பது எனக்கு தெரியும். அழுகிய உருளைக்கிழங்கை நாங்கள் எடுக்க மாட்டோம் என்று பலர் கூறியுள்ளனர். நான் அந்த அளவு நிறைவடையவில்லை, அதே தவறை மீண்டும் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளேன்.

முதல்வரை எச்சரித்த பிரபல நடிகர்

நீங்கள் எந்த தப்பும் செய்யாமல், சுத்தமாக இருந்தால் வீட்டுக்கு போய் நிம்மதியா தூங்கலாம், ஒன்னும் ஆகாது. ஆனால் ஆதாரம் இருந்தால் பிரதமரோ, குடியரசு தலைவரோ கூட உங்களை காப்பாற்ற முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply