மதுரைக்கு எய்ம்ஸ் வருமா ? வராதா ?? கலாய்த்து தள்ள சந்தைக்கு வந்தாச்சு புது டீ ஷர்ட் …

மதுரை ;

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இங்கு நீண்ட காலமாகவே இருந்து வந்தது. இதன் மூலம் தமிழக மக்கள் அதிகம் பலன் பெறுவார்கள் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதை நிறைவேற்றும் வகையில், மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்தது.

இதற்கான இடத்தை தேர்வு செய்யவே சில மாதங்கள் வரை ஆனது. பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் திருப்பரங்குன்றத்தில் இருக்கும் உட்பட்ட தோப்பூரில் அமையும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 2019 மக்களவை தேர்தலுக்கு முன்பு, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

அதன் பின்னர் மிக விரைவில் கட்டுமான பணிகள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அப்படி எதுவும் நடக்கவில்லை. சுமார் 3 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், சுற்றுச்சுவரைத் தவிர வேறு எந்தவொரு கட்டுமான பணிகளும் நடக்கவில்லை..

இந்நிலையில் சமீபத்தில் தமிழ்நாட்டுக்கு வந்த பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா, ‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கா கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. எய்ம்ஸ் எங்கு அமைக்கலாம் என்று சிக்கல் எழுந்த நிலையில், மதுரையில் கட்ட முடிவு செய்தோம்.

அதற்கான தொகை ஒதுக்கப்பட்ட நிலையில், இன்று எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட பணிகளில் 95% முடிவடைந்துள்ளன. விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும்’ என்று பேசியிருந்தார். எய்ம்ஸ் குறித்த நட்டாவின் இந்த பேச்சு இணையத்தில் வேகமாகப் பரவியது. மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளில் சுற்றுச் சுவரைத் தவிர எதுவும் கட்டவில்லை என்று இணையத்தில் பலரும் சாடி வந்தனர். 

மதுரைக்கு எய்ம்ஸ் வருமா ? வராதா ?? கலாய்த்து தள்ள சந்தைக்கு வந்தாச்சு புது டீ ஷர்ட்

மதுரை எம்பி வெங்டேசன், ‘புல்புல் பறவைகள் மூலம் 95 சதவிகித வேலையைக் கட்டி முடித்த மதுரை எய்ம்ஸ் கடிதத்தைத் தேடி நானும் மாணிக்கம் தாகூர் போனோம். கீழ்வானம் வரை மதுரை கிழவி வெற்றிலை போட்டு துப்பிய எச்சிலால் சிவந்து கிடந்தது நிலம்’ என்று நக்கலாக பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் மதுரைக்கு எய்ம்ஸ் வருமா ? வராதா ??’ என்ற புதிய டி-சர்ட் சந்தைக்கு வந்துள்ளது. இது மேலும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

Leave a Reply