சூடான, சுவையான நாவில் எச்சில் ஊரும் “கிராமத்து கறிக்குழம்பு” செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

Advertisements
  • ஆட்டுக்கறி – 1 கிலோ
  • பெரிய தக்காளி – 2  
  • சின்ன வெங்காயம் – 10  
  • காய்ந்த மிளகாய் – 10  
  • எண்ணெய் – தேவையான அளவு  
  • சோம்பு  – ½ ஸ்பூன்   
  • உப்பு – தேவையான அளவு  
  • பூண்டு – 5 பல்
  • ஏலக்காய் – 2  
  • துருவிய தேங்காய் – 1/4 கப்
  • மஞ்சள் தூள் –  ½ ஸ்பூன்
  • பட்டை -1 துண்டு   
  • லவங்கம் – 2
  • கசகசா – 1 ஸ்பூன்
  • மிளகு – 2 ஸ்பூன்
  • தனியா – 1 ஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிதளவு  
  • கொத்தமல்லி தழை – சிறிதளவு
  • கடுகு – 1 ஸ்பூன்
  • சீரகம் – 1 ஸ்பூன்
  • உளுந்து – 1 ஸ்பூன்
  • கடலைப்பருப்பு  – 1 ஸ்பூன்

செய்முறை:-

  • முதலில் கறியை சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும். பின்னர் கறியில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாய், தனியா, மிளகு என அனைத்தையும் தனித்தனியே போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • வறுத்த பொருட்களுடன் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு, கசகசா, தேங்காய் என அனைத்தையும் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • இன்னொரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், உளுந்து, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, என அனைத்தையும் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், பூண்டு ஆகிய இரண்டையும் போட்டு நன்கு வதக்கவும்.
  • அனைத்தும் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
  • அத்துடன் வேகவைத்த ஆட்டுக் கறியை சேர்க்கவும். அரைத்த விழுது, மஞ்சள் தூள், தண்ணீர், உப்பு ஆகிய அனைத்தையும் சேர்த்து எண்ணெய் நன்கு திரண்டு வரும் வரையில் கொதிக்க விடவும்.
  • நன்கு கொதித்த பிறகு கடைசியாக கறிவேப்பிலை, கொத்தமல்லியை தாளித்து கொட்டி இறக்கினால் சுவையான கிராமத்து கறிக்குழம்பு ரெடி..