“கமிஷனருக்கும் காசு கொடுக்கனும்” வசூல் வேட்டையில், கோவை மாநகராட்சியின் “உதவி நகரமைப்புப்பிரிவு பெண் அதிகாரி”

கோவை:

லஞ்சம் என்றும் வைரலானது தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை விட கொடியதாகும். கொரோனா வைரஸிற்க் குக்கூட இன்னும் சில மாதங்களில் மாற்று மருந்து கண்டுபிடித்து தடுத்து விடுவார்கள். ஆனால் மக்களை பாடாய் படுத்தி எடுக்கும் லஞ்சம் என்னும் வைரஸை கட்டுப்படுத்தும் நாள் என்று வருமோ என தெரியவில்லை.

அந்த வகையில் கோவை மாநகராட்சியில் உள்ள சில அதிகாரிகள் லஞ்சம் வாங்க பலவித காரணங்களை சொல்லி தங்கள் வாழ்வை வளமாக்கி பொதுமக்களை கசக்கி பிழிந்து வருகின்றனர். நான் சொல் வது தான் சட்டம், கமிஷனருக்கும் காசு கொடுக்கனும் என்ற ரீதியில் பேசி வசூல் வேட்டை நடத்தி வரும்,

கோவை மாநகராட்சி உதவி நகரமைப்புப்பிரிவு பெண் அதிகாரியைப்பற்றி இந்த வாரம் பார்ப்போம்:-

கோவை மாநகராட்சியின் வடக்கு மண்டலத்தில் உதவி நகரமைப்புப் பிரிவு அலுவலராக பணிபுரிந்து வரும் திரு. ஜெயலட்சுமி அவர்கள், நான் சொல்வதுதான் சட்டம், கமிஷனர் மற்றும் உயர் அதிகாரிக ளுக்கு காசு கொடுக்கனும் என்ற ரீதியில் பேசி நூதன வசூல் வேட்டை நடத்தி வருகிறார்.

கடந்த ஜனவரி ( 2 to 8 ) 2019 நமது தினபறவை இதழில் ‘‘காசு இருந்தால்தான் கையெழுத்து’’ கறார் காட்டும் கோவை மாநகராட்சி உதவி நகரமைப்புப்பிரிவு அதிகாரி, என்ற தலைப்பில் இவர் செய்து வரும் முறைகேடுகளை ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டிருந் தோம். அதன் பின்னர் அமைதியாக சில மாதம் இருந்த இவரை ஜீலை மாதம் 2019 ல் கோவை மாநகராட்சியின் பிரதான அலுவல கத்தில் Jnnurm பிரிவிற்க்கு AWE- ஆக அதிரடியாக பணிமாற்றம் செய்தனர்.

மீண்டும் வடக்கு மண்டலத்திற்க்கு…

இந்த அதிரடி மாற்றத்தால் கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத் திற்க்கு வரும் பொது மக்களும், கட்டிட வரைபாட்டாளர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். மேலும் நல்ல முறையில் போய்க் கொண்டிருந்தது வடக்கு மண்டல நகர மைப்புப்பிரிவு. Jnnurm பிரிவிற்க்கு மாற்றப்பட்ட திரு.ஜெயலட்சுமி அவர்களுக்கு அங்கு வருமானம் பார்க்க முடியாததால் வளம் கொழிக்கும் அதே வடக்கு மண்டல அலுவலகத்திற்க்கு எப்படியேனும் மாறுதல் வாங்கி வரவேண்டும் என்று பிடிக்க வேண்டியவர்களைப் பிடித்து ,கொடுக்க வேண்டியதைக் கொடுத்து மீண்டும் அதே வடக்கு மண்டலத்திற்க்கு உதவி நகரமைப்புப்பிரிவு அதிகாரியாக ஐந்தே மாதத்தில் அதாவது நவம்பர் 2019 – ம் ஆண்டு பணி மாறுதல் வாங்கி வந்து விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் இவரது பண பலத்தை.

“கமிஷனருக்கும் காசு கொடுக்கனும்”

வந்ததும்… மீண்டும் தனது வேலையை காட்டத் தொடங்கிய திரு.ஜெயலட்சுமி நகரமைப்புப்பிரிவிற்க்கு வரும் பொதுமக்களிட மும், கட்டிட வரை பாட்டாளர்களிடமும் சிறிதும் மரியாதை கொடுக் காமல் தனது முகத்தைக் காட்ட தொடங்கி உள்ளார்.மேலும் அலுவல கத்திற்க்கு இவரைக்காண யார் வந்தாலும் குறைந்த து 2 மணி நேரம் காக்க வைத்த பிறகே பார்ப்பாராம். அதுமட்டு மல்லாது இவரது அலுவலகத்திற்க்கு வரும் யாரயும் இருக்கையில் அமர வைத்து பேசும் பழக்கம் கிடையாதாம்.

நிற்க்க வைத்து தான் பேசுவாராம். மேலும் இவரிடம் வரும் கட்டிட அனுமதி கோப்புகளுக்கு 1 சதுர அடிக்கு இத்தனை ரூபாய் கொடு த்தால் தான் கையெ ழுத்து போடுவேன் என்றும் கமிஷனர் வரை காசு கொடுக்க வேண்டும் ஆகையால் இவ்வளவு ரூபாய் கொடுத்தால் தான் கையெழுத்து போடுவேன் என்று கறார் காட்டுகிறாராம். கேட்கும் காசு கொடுத்தால் தான் கையெழுத்து, இல்லையென்றால் கட்டிட அனுமதி கோப்பில் ஏதாவது கொறி (தவறு) போட்டு கட்டிட அனுமதி கோப்பை திருப்பி அனுப்பி விடுவாராம்.

மேலும் “நான் சொல்வது தான் இந்த அலுவலகத்தில் சட்டம்” ,நான் சொல்வதுபடி நடந்தால்தான் கட்டிட அனுமதி கோப்பில் கையெழுத் தாகும் இல்லையென்றால் எங்கு சென்று சொன்னாலும் கையெழுத் தாகாது என்று கறார் காட்டுவாராம். மேலும் பணம் வசூல் செய்வதற் கென்றே 3 உதவியாளர்களை வைத்துள்ளாராம். கட்டிட அனுமதிக்கு உண்டான வசூல் வந்து விட்டது என்று உதவியாளர்கள் கூறிய பின்னரே கோப்புகளில் கையெழுத்து இடுவாரம்.

ஆட்டைக் கடித்து மாட்டை கடித்து கடைசியில் மனுஷனை கடிப்பது என்ற பழமொழிக்கேற்ப்ப, தான் வாங்கும் லஞ்சத்திற்க்கு கணக்காக நகரமைப்புப்பிரிவு அதிகாரிக்கும், கமிஷனருக்கும் கொடுக்க வேண்டும் என்ற விளக்கமளித்து பகிரங்கமாக கேட்டு வசூல் வேட்டை செய்கிறாராம், இந்த வடக்கு மண்டல உதவி நகரமைப்புப்பிரிவு அதிகாரி ஜெயட்சுமி.

உதவியாளர்கள் மூலமே பணப்பட்டுவாடா…!!

மேலும் இவர் யாரிடமும் நேரடியாக தொலைபேசியில் பேசி பணம் வாங்க மாட்டாராம். உதவியாளர்கள் மூலமே பணப்பட்டுவாடா நடக்குமாம், மேலும் இவர் மீது எந்த புகார் வந்தாலும் பணத்தாலேயே அடித்து அந்த புகாரை ஒன்றுமில்லாமல் செய்து விடுவாராம். இதனால்தான் தொடர்ந்து இந்த பதவியில் ஒரே இடத்தில் இவரால் நீடிக்க முடிகிறது.

நடவடிக்கை பாயுமா?

உயர் அதிகாரிகள் பெயரை சொல்லி வசூல் வேட்டை நடத்தும் இவர் போன்ற அதிகாரிகள் மீது துறை ரீதியாக முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் பொதுமக்களும், கட்டிட வரைபாட் டாளர்களும் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள். கோவை மாநகராட்சி ஆணையர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புவோம்…

அதிகாரி ஜெயலட்சுமி பற்றி கட்டிட வரைபாட்டாளர்களின் குமுறல் விரைவில் நமது தினபறவையில்.

Related Posts