“எல்லோருக்கும் அச்சம் இருக்கிறது” ரசிகர்களுக்கு “ஜடேஜா” ஆறுதல்…

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உலகமே ஸ்தம்பித்து வரும் நிலையில், விளையாட்டு வீரர்கள் சமூக ஊடகங்களில் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர்.

கொரோமா வைரஸ் அச்சத்திற்கு மத்தியில் தங்கள் மனதை உறுதியா வைத்துக்கொள்ளவும், கொரோனா வைரஸ் வெடிப்பிற்கு எதிரான போராட்டத்தில் மக்களை ஊக்குவிக்கவும் விளையாட்டு வீரர்கள் தங்கள் உரையாட்கள் மூலம் முயற்சித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ரசிகர்களுக்கும் அன்பானவர்களுக்கும் ஒரு நேர்மறையான மனநிலையை உண்டாக்க ஒரு குறுஞ்செய்தியை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகையில்., ‘எல்லோருக்கும் அச்சம் இருக்கிறது, சிலர் அதை வெல்வார்கள் #beyourself #rajputboy.’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts