இந்தியாவில் மொபைல் எண் 11 இலக்கமாக மாற்றமா ? டிராய் விளக்கம்..!!

இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாக மொபைல் எண் 10 இலக்க எண்களை கொண்டு உபயோகப்படுத்திக் கொண்டு வரும் நிலையில் திடீரென கடந்த சில நாட்களாக ஒரு சில ஊடகங்களில் இந்தியாவில் மொபைல் எண், 11 இலக்க எண்ணாக மாறப் போவதாக செய்திகள் வெளியாகின

தற்போது உள்ள 10 இலக்க எண்களுக்கு முன்னால் ஒரு ஜீரோ சேர்த்துக்கொள்ளும்படி விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து டிராய் தற்போது விளக்கமளித்துள்ளது. இந்தியாவில் தற்போது 10 இலக்க மொபைல் எண்கள் பயன்படுத்தப்படுவதாகவும் இந்த எண்ணை 11 இலக்கமாக மாற்றும் ஐடியா இப்போதைக்கு இல்லை என்றும் இது குறித்து ஊடகங்களில் வெளிவரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது என்றும் அறிவித்துள்ளது.

மேலும் மொபைல் எண்ணுக்கு முன்னால் ஜீரோ சேர்த்துக்கொள்ளும் அறிவிப்பு எதுவும் வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் ஏற்கனவே உபயோகப்படுத்தப்பட்ட எண்களே தொடரும் என்றும் அறிவித்துள்ளது. இதனையடுத்து 11 இலக்க மொபைல் எண் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது