கொரோனா நோயாளிக்கு “11 கோடிக்கு சிகிச்சை” அளித்த மருத்துவமனை… நோயாளி அதிர்ச்சி!!!

அமெரிக்காவின் கோலராடோ மாகாணத்தை சேர்ந்தவர் ராபர்ட் டெனிஸ். உயர்நிலை பள்ளி ஆசிரியராக பணிபுரியும் இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2 வாரங்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் அவருக்கு மருத்துவம் பார்த்ததற்கான பில்லை கண்டு அவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

அவருக்கு சிகிச்சை கட்டணமாக 8 லட்சத்து 40 ஆயிரத்து 386 டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவரது மனைவியும் கொரோனா சிகிச்சை பெற்று வந்ததையும் சேர்த்து 1.5 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.11.33 கோடி) கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அவர் மருத்துவ காப்பீடு செய்திருந்ததால் நல்ல வேளையாக தப்பித்துள்ளார். எனினும் இது மிகவும் அதிகமான தொகை என அவரது மனைவி கூறியுள்ளார்.