“தியாகி குமரன் மார்க்கெட்டில்” இயங்கி வந்த 88 கடைகள் இடிப்பு!! வியாபாரிகள் அதிர்ச்சி….

கோவை:

கோவையில் அனுமதியின்றி செயல்பட்டுவந்த 88 காய்கறி கடைகள், உயர்நீதிமன்ற உத்திரவின்படி போலிஸ் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது…

கொரானா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கோவையில் செயல்பட்டு வந்த காய்கறிகள் விற்பனை மார்க்கட் அரசு பேருந்து நிலையங்களில் தற்காலிகமாக  செயல்பட அரசு வழிவகை செய்தது, தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு பேருந்துகள் இயங்க துவங்கியதால் தற்காலிக கடைகள் அகற்றப்பட்டு ஏற்க்கனவே இயங்கிவந்த கோவை தியாகி குமரன் மார்க்கட்  50 சதவிகித கடைகள் மட்டும் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

இதனால் தியாகி குமரன் மார்க்கெட்டில், நடைபாதையில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 88 தரை கடைகள் என்று அழைக்கப்படும் நடைபாதை கடைகள் உயர்நீதி மன்ற தீர்ப்பையடுத்து. மாநகராட்சி அதிகாரிகள் போலிஸ் பாதுகாப்புடன் இடித்து தள்ளினர்.

வியாபாரிகள் வேதனை:

இநிலையில் கடைகளை நம்பி பிழப்பை நடத்திவரும் வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மிகவும் கவலை தெரிவித்துள்ளார்கள். மேலும் இதுகுறித்து இங்கு கடைகள் நடத்திவந்த வியாபாரிகள் தெரிவிக்கும்போது கொரானா காலத்தில் தற்காலிக கடைகளில் எதிர்பார்த்த வியாபாரம் இல்லாமல் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் தற்சமயம் நாங்கள் காலம் காலமாக நடத்திவந்த  கடைகளை இடித்து அப்புறப்படுத்துவதால் எங்களின் 88 குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. தமிழக அரசு எங்களை போன்ற சிறு வியாபாரிகளுக்கு, கடைகளை நடத்த மாற்று இடம் ஒதுக்கி தரவேண்டும். என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.