”நடிகை ரம்யா கிருஷ்ணன்” காரில் மதுபாட்டில்கள்: – போலீஸார் பறிமுதல் செய்தனர்

சென்னை,
தென்னிந்திய திரைப்படத்துறையில் மிகவும் புகழ்பெற்ற நடிகை ரம்யா கிருஷ்ணன். இவரது காரில் மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பால் சென்னையை தவிர்த்து மற்ற இடங்களில் மதுபானம் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நாள்தோறும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால், மதுபானம் வாங்கி வருவதைத் தடுக்கும் வகையில் போலீஸார் சோதனைச் சாவடிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று கிழக்குக் கடற்கரைச் சாலையில் முடுக்காட்டில் உள்ள சோதனைச்சாவடியில் இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த கானத்தூர் போலீஸார், அவ்வழியே வந்த ஒரு காரை மறித்து சோதனை செய்ய வேண்டுன் என் கூறியுள்ளனர்.

அப்போது காரில் இருந்த நடிகை ரம்யாகிருஷ்ணன், அவரது சகோதரி வினயா கிருஷ்ணன் இருவரும் சோதனை செய்ய அனுமதியளித்துள்ளதாக தெரிகிறது. போலீஸாரின் சோதனையில் 96 பீர்பாட்டில்கள்,8 மதுபாட்டில்கள் இருந்துள்ளன. இதுகுறித்து வானத்தை ஓட்டிவந்த ஓட்டுநர் செல்வகுமார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளானர்.

பின்னர், ரம்யா கிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரி வினயா கிருஷ்ணன் இருவரும் செல்வக்குமாரை பிணையில் அழைத்துச் சென்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.