பெண் அகோரியாக மாறிய ”நமீதா”

சென்னை,
நயன்தாரா காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமான நமீதா கொஞ்ச நாட்களிலேயே ஒட்டுமொத்த இளசுகளையும் மச்சான்ஸ் என்று அழைத்து கவர்ந்தார். தமிழில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து அழகிய தமிழ் மகன், பில்லா உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வெற்றி பெற்றார். கொஞ்சும் தமிழ், அளவற்ற கவர்ச்சி என அத்தனை பேருக்கும் பரீட்சியமான நடிகையான நமீதாவுக்கு நாட்கள் செல்ல செல்ல புது நடிகைகளின் வருகையால் மார்க்கெட் சரிந்தது.

பின்னர் தனது நீண்டநாள் நண்பரும் காதலருமான வீரேந்திர சௌத்ரியை 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வாழ்வில் செட்டில் ஆனார். இந்நிலையில் தற்போது நடிகை நமீதா அகோரியாக வேடமிட்டு ஆக்ரோஷமாக இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்து செம வைரலாகி வருகிறது. இது நமீதா நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான ‘பொட்டு’ என்ற படத்தின் புகைப்படங்கள், அதில் அவர் அகோரியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.