கத்தியை காட்டி, கொலை மிரட்டல் விடுத்த நபரை’ நடுங்க வைத்த “கோவை காவல் துறை”

கோவை:

கோவை சரவணம்பட்டி பகுதியில் கத்தியை காட்டி, பணம் பறித்த நபரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது.

கோவை மாவட்டத்தில் கடந்த, 30ம் தேதி, சின்ன வேடம் பட்டி பகுதியில், உள்ள அஞ்சுகம் நகரை சேர்ந்த ரவுடி செந்தில் என்பவர், மணியகாரம்பாளையம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெட்டிக்கடை வைத்துள்ள தனசேகரன் என்பவரை, கத்தியை காட்டி மிரட்டி ஆயிரம் ருபாயை பறித்தது மட்டுமன்றி, கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக சரவணம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து செந்தில் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலில் உள்ளார்.

மேலும் இவர் மீதான புலண் விசாரணையில் செந்தில் மீது கோவை மாவட்டத்தில் 4கொலை வழக்குகள், 2கொலை முயற்சிகள் என பல வழக்குகள் நிலுவையில் உள்ளது எனவும், மேலும் இவர்மீது இரத்தினபுரி காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகின்றது எனவும், இதனால் கொலைக் குற்றவாளியான செந்திலை வெளியே விடும் பட்சத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு வாய்ப்புள்ளது என காவல்துறை அதிகாரிகளின் தரப்பில் கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் பரிந்துரை செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து கோவை மாநகர காவல் ஆணையாளரின் உத்தரவு படி, செந்தில் என்பவர் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்