“மீண்டு எழுந்து வருவார்” என இறந்த தாயுடன் சில நாட்கள் வாழ்ந்த மகள் – அதிர்ச்சி சம்பவம்…

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் செர்புழச்சேரியில் வசித்து வந்தவர் ஓமனா (72). இவர் தனது மகள் கவிதாவுடன் (43) வீட்டில் தனியே வசித்து வந்தார்.

ஓமனா தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மகள் கவிதா ஓமியோபதி டாக்டராக இருந்து வருகிறார். இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக ஓமனா சில நாட்களுக்கு முன் இறந்துவிட்டார்.

ஆனால், தாயின் இறப்பு குறித்து யாருக்கும் தெரியப்படுத்தாமல் அவர் மீண்டு எழுந்து வருவார் என்று பிணத்துடன் இருந்துவிட்டார்.

இந்நிலையில் அக்கம் பக்கத்தில் துர்நாற்றம் வீசவே அவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் ஓமனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கவிதாவிடம் இதுகுறித்து விசாரித்ததற்கு அவர் மீண்டும் எழுந்து வருவார் என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் கவிதாவிடம் மேலும் விசாரித்து வருகின்றனர்.