“மிரட்டும் கொரோனா” 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 54,771 பேருக்கு கொரோனா தொற்று..!!

உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கையில் மிகப் பெரிய ஒற்றை நாள் அதிகரிப்பை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்உலகம் முழுவதும்  183,000 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளது. பிரேசிலில் 54,771 பாதிப்புகள் அதிகரித்துள்ளதாகவும், அடுத்ததாக  அமெரிக்காவில் 36,617 பாதிப்பும், இந்தியாவில் 15,400 க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து உள்ளனர

பாதிப்பு எண்ணிக்கைகள் அதிகரித்து வருவது அதிகப்படியான சோதனை மற்றும் பரந்த தொற்று உள்ளிட்ட பல காரணங்களை பிரதிபலிப்பதாக நிபுணர்கள் தெரிவித்தனர். தொற்றுநோய்களில் உலக சுகாதார அமைப்பு தகவலில் உலக அளவில்  மொத்தம்  8,708,008 பேர் கொரோனாவால் பதிக்கப்பட்டு உள்ளனர். 461,715 பேர் தொற்று நோயால் பலியாகி உள்ளனர்.  ஒருநாள் இறப்பு சராசரி 4,743 ஆக அதிகரித்துள்ளது. புதிய இறப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.