கொரோனா தடுப்புப் பணியில் “கோவை மாவட்டம்” முன்னணியில் உள்ளது- முதல்வர் பெருமிதம்…

கோவை: 

கோவையில் ரூ.72.40கோடியிலான பல்வேறுதிட்டங்களை தொடங்கி வைக்கவும், கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு நடத்தவும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனி சாமி இன்று சேலத்தில் இருந்து கார் மூலம் கோவை வந்தார் .

முதலில் ரூ.72.40 கோடியிலான பல்வேறு திட்டங்களை முதல்- அமை ச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அதைதொடர்ந்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். பின்னர் முதல்- அமை ச்சர் தலைமையில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

அந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி அனைத்து வசதிகளையும் கொண்ட மாவட்டம், கோவை  மாவட்டம் என்றும் கோவையில் தினமும் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது என்றும் அரசு எடுத்த நடவடிக்கையால் கோவையில் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என கூறினார். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை 3 கட்டங்களாக பிரிக்கப்பட்டு நடைபெறுகிறது. 

கோவை மாநகரில் அதிகளவில் பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. கோவையில் புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது என்றும்  தொழிற்துறையினரின் கோரிக்கைகளை நிறை வேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் அரசு அறிவித்த திட்டப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன என்று முதலமைச்சர் கூறினார்.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர், கொரோனா தடுப்புப் பணியில் கோவை மாவட்டம் முன்னணியில் உள்ளது. ஆனால் திமுக தலைவர் கொரோனா தடுப்பு நடவடிக்கை யை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். ஒரு நோயை வைத்து அரசியல் செய்யும் ஒரே கட்சி திமுக தான் என எதிர்கட்சி மீது குற்றம்சாட்டினார். 

மேலும் அவர் பேசியதாவது:

> தமிழகத்தில் 90 நாட்கள் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியதால் தான் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது

> தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணியை நாள் தோறும் தீவிரப்படுத்தி வருகிறோம். 

> தமிழக அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக் மாநிலத்தில் இறப்பு விகிதம் குறைந்து வருகிறது.

> தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது.

> சிறு குறு நடுத்தர தொழில்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசிடமிருந்து நிதி உதவி பெற்று தரப்பட்டுள்ளது.

> உண்மைக்கு புறம்பான பொய்யான செய்திகளை மு.க.ஸ்டாலின் பரப்பி வருகிறார்.

> அரசுக்கு உதவி செய்யாமல், சோதனையான இந்த காலத்திலும் அரசு மீது தவறான குற்றச்சாட்டை ஸ்டாலின் கூறி வருகிறார்.