ஏழு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை ; 65 வயது முதியவர் போக்சோவில் கைது…!!

கோவை:

கோவையில் இரண்டாம் வகுப்பு பயிலும் ஏழு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 65-வயது முதியவரை ராமநாதபுரம் காவல் துறையினர் கைது செய்தனர்.

புளியகுளம், தாமுநகர் பகுதியை சேர்ந்த தம்பதியினர், பீளமேடு பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் வியாபாரத்துக்கு செல்லும் போது, தங்களது 7-வயது பெண் குழந்தையை தனது உறவினரிடம் விட்டு சென்று உள்ளனர்.

இந்நிலையில் உறவினரான (சிறுமியின்தாய்க்கு சித்தப்பா) வரதராஜன் (65) அந்த குழந்தைக்கு கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் பாதிப்படைந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.