“கொரோனா” பரிசோதனை முறைகேடு; தனியார் ஆய்வு மைய்ய அனுமதி ரத்து..!!

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கோவையில் கொரோனா பரிசோதனை மையங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் தலைநகர் சென்னை தவிர மேலும் சில முக்கிய நகரங்களான மதுரை, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந் நிலையில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள தனியார் ஆய்வகங்களுக்கும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலை யில் கோயம்புத்தூரில் உள்ள நான்கு தனியார் கொரோனா பரிசோதனை மையங்கள் கொரோனா பரிசோதனையில் முறை கேடு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

அதை தொடர்ந்து உடனடி நடவடிக்கை மேற்கொண்ட தமிழக சுகாதார துறை உடனடியாக சம்பந்தபட்ட 4 ஆய்வு மையங்களு க்கும் கொரோனா பரிசோதனை அனுமதியை ரத்து செய்துள்ளது.