இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் “தல தோனி” தோனியின் பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்கள்…

கடந்த ஆண்டு உலக கோப்பை தொடரில் அரையிறுதியில் இந்தியா தோல்வி அடைந்ததை தொடர்ந்து மகேந்திர சிங் தோனி இந்திய அணியில் விளையாடாமல் உள்ளார். தொடர்ந்து ஒவ்வொரு நாட்டின் டெஸ்ட் மேட்சிலும் தோனியை எதிர்பார்த்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் மகேந்திர சிங் களமிறங்கியது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் அவர் பயிற்சி ஆட்டத்திற்காக களமிறங்கிய சூழலில் அவரை பார்க்க பெரும் கூட்டமே அங்கு குவிந்தது. தற்போது ஐபிஎல் நடைபெறாவிட்டாலும் என்றும் அவர் ரசிகர்கள் மனதில் ‘தல தோனி’யாகவே இருக்கிறார். இன்று தோனியின் பிறந்தநாளையொட்டி பலரும் #ThalaDhoni #No7 போன்ற ஹேஷ்டேகுகளை இணையத்தில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் டிவிட்டரில் பதிவிட்டுள்ள இசையமைப்பாளர் தமன் ஒரு படத்தையும் பதிவிட்டுள்ளார். பாகுபலி படத்தில் அமேரேந்திர பாகுபலியின் தங்கசிலை இருப்பது போன்ற ஸ்டைலில் கிரிக்கெட் மைதானத்திற்கு நடுவே தோனியின் தங்க சிலை இருப்பது போல டிசைன் செய்யப்பட்டுள்ள அந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Posts