“தமிழகத்தில் மழை” வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்…

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கி யதால் எதிர்பார்த்த அளவு மழை பெய்யாவிட்டாலும் இரவு நேரங் களில் மட்டும் சிறிது மழை பெய்து வருகிறது.  பகலில் வெயிலும், இரவில் மழையும் என மாறி மாறி இருந்ததால் வெயிலின் தாக்கம் குறைந்து மக்கள் நிம்மதி அடைந்தனர். அதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக லேசான சாரல் மழை பெய்து வருகிறது. 

இந்த நிலையில் காற்றின் திசை வேக மாறுபாடு, வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், கோவை, சேலம், நாமக்கல், நீலகிரி, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு  உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.