குற்றசாட்டு எழுந்த நிலையில் “ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” க்கு தடை-அரசாணை வெளியீடு…

சாத்தான்குளம் கொலை வழக்கில் ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினருக்கும் தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தமிழகம் முழுவதும் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினரை காவல் பணிகளில் ஈடுபடுத்த 2 மாத காலத்திற்கு தடை விதிக்க அனைத்து மாவட்ட காவல்நிலையங்களுக்கும் வாய்வழி உத்தரவு வெளியாகியது.

இந்நிலையில் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினர் பல இடங்களில் அத்துமீறியதாக சமூக வலைதளங்களில் பலர் தெரிவித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.