“இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கறை” சீனா மீது பொருளாதார தடை விதித்த “அமெரிக்கா”

உய்குர் மக்களை அதிகளவில் சிறையில் அடைப்பது, அவர்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவது, அனுமதியின்றி அவர்களின் தனித்தகவல்களை சேகரிப்பது உள்ளிட்ட அடக்குமுறைகளை சீன அரசு செய்து வந்தது. உய்குர் மக்கள் மீது நடத்தப்படும் அடக்கு முறைகளை கண்டித்துள்ள, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, அவர்களை சீனா நடத்தும்விதம் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கறை என விமர்சித்துள்ளார். 

இந்நிலையில், 11 சீன நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்திருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.