“ஏறுமுகத்தில் தங்கம்” நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்கம் விலை, ரூ.39.000 ஐ கடந்து கடைகளில் விற்பனை…

தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே உச்சத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது ஆடி மாதம் வந்துள்ளதால் விலை குறையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்ப்பார்ப்பை தவிடுபொடி ஆக்கும் வகையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.  நேற்று இதுவரை இல்லாத வகையில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.39 ஆயிரத்தை நெருங்குகிறது.

ஆம், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.592 உயர்ந்து ரூ.38,776க்கு விற்பனை ஆனது. இந்நிலையில் இன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.256 உயர்ந்து ரூ.39,032க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4879 ஆக உயர்வு. 

Related Posts