“கொரானாவால் பலியானால்” குடும்பத்துக்கு “ரூ.1 லட்சம்” முதல்வர் அதிரடி அறிவிப்பு…

உலகையே உலுக்கி வரும் கொரோனா இந்தியாவிலும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  தொற்று பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்த பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள், காவல் துறை அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இறக்க நேரிட்டால் அவர்களது குடும்பங்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் சிறப்பு நிவாரண தொகைகள் அளிப்பதுடன், வாரிசு வேலையும் வழங்கப்படும் என அறிவித்துள்ளன.

ஆனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து மாநில அரசுகள் இதுவரை அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. அந்த வகையில் புதுவை அரசு முதன்முதலாக தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் அறிவிக்கப்படாத ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள் இறக்க நேரிட்டால் அவர்களது குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் மற்றும் கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்கப்படும் என புதுவை அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.