பெண்களே!! உச்சி முதல் பாதம் வரை வெள்ளை சருமம் பெற “பீட்ரூட் ஸ்கரப்” -பயன்படுத்தும் முறை…

தோழிகளே இன்று நாம் அதிகப்படியான வெயில் காரணமாக நம் கை, கால் மற்றும் முதுகு பகுதி கருமையாக இருக்கும். இந்த வெயில் தாக்கத்தினால் ஏற்படும் கருமைகள் நீங்க ஒரு அருமையான அழகு குறிப்பு டிப்ஸினை ஆண், பெண் இருவருமே பின்பற்றலாம். இயற்கையாகவே தங்களுடைய சருமம் நிறம் மாறுவதை தாங்களே உணருவீர்கள். அதாவது பீட்ரூட்டை பயன்படுத்தி ஒரு அருமையான இயற்கை ஸ்கரப் எப்படி தயாரிக்கலாம்..? அதனை எப்படி சருமத்தில் பயன்படுத்தலாம் என்பதை பற்றி பார்க்கலாம்…

தேவையான பொருட்கள்:-

  • பீட்ரூட் – 1
  • பச்சரிசி மாவு – 100 கிராம்

பீட்ரூட் இயற்கை ஸ்கரப் செய்முறை:-

1,

பீட்ரூட் ஒன்றை எடுத்து கொள்ளுங்கள் அவற்றை சுத்தமாக கழுவி, அவற்றில் உள்ள தோல் பகுதியை நீக்கிவிடுங்கள்.தோல் சீவிய பீட்ரூட்டினை நன்றாக துருவி எடுத்துக்கொள்ளுங்கள். பின் துருகிய பீட்ரூட்டை வடிகட்டியை பயன்படுத்தி சாறு பிழிந்து எடுத்து கொள்ளுங்கள்.

2,

பிறகு அடுப்பில் ஒரு சிறிய கடாய் வைத்து அவற்றில் பீட்ரூட் சாறினை ஊற்றி அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நன்றாக காய்ச்ச வேண்டும். தாங்கள் ஒரு கிளாஸ் பீட்ரூட் சாறு ஊற்றி காய்ச்சினால் அது 1/4 கப் வரும் அளவிற்கு காய்ச்ச வேண்டும். 1/4 பங்கு அளவிற்கு பீட்ரூட் சாறினை காய்ச்சிய பிறகு அடுப்பில் இருந்து இறக்கவும்.

3,

பின் அவற்றில் 100 கிராம் அரிசி மாவினை சேர்த்து நன்றாக கட்டிகள் இல்லாதவாறு கிளறி விட வேண்டும். பிறகு ஒரு அகலமான பிளைட்டில் இந்த கலவையை சேர்த்து ஈரப்பதம் இல்லாதவாறு சிறிது நேரம் நிழலில் உலர்த்துங்கள். பிறகு ஒரு காற்றுப்புகாத டப்பாவில் இந்த பவுடரை கொட்டி நன்றாக மூடி வையுங்கள். அவ்வளவு தாங்க பீட்ரூட் இயற்கை ஸ்கரப் தயார் இதனை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

Advertisements

பயன்படுத்தும் முறை:-

தினமும் குளிப்பதற்கு முன் இந்த பவுடரை தங்களுக்கு தேவையான அளவு ஒரு கிண்ணத்தில் எடுத்து கொண்டு அவற்றில் பால் அல்லது ரோஸ் வாட்டர், அல்லது தயிர் இவற்றில் ஏதேனும் ஒன்றை கலந்து தங்கள் சருமத்தில் அப்ளை செய்து, சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள். இவ்வாறு செய்த பிறகு சிறிது நேரம் கழித்து குளிக்க செல்லுங்கள்.

இவ்வாறு தினமும் செய்வதினால் சரும நிறம் வெள்ளையாகும். முகத்தில் படிந்திருக்கும் அழுக்கு அகன்று சருமம் பளிச்சென்று இருக்கும், முகத்தில் உள்ள பருக்கள் அனைத்தும் நீங்கி சருமம் மென்மையாக காணப்படும்.

Related Posts