சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு “முன்னால் முதல்வர்கள்” பெயர் -எடப்பாடி அறிக்கை

சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களை பெயர் மாற்றம் செய்து முதல்வர் பழனிசாமி அறிக்கை வெளிட்டுள்ளார்.  சென்னையில் ஆலந்தூர், சென்ட்ரல், புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ ரயில் நிலையங்களின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த ஜெயலலிதா எடுத்த நடவடிக் கையை நினைவுகூரும் வகையில் பெயர் மாற்றம் செய்யப்ப ட்டுள்ளதாக முதலமைச்சர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ எனவும், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் மெட்ரோ எனவும் புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ, புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா CMBT மெட்ரோ எனவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.