“மது போதைக்காக” சாராயத்துடன் “சானிடைசர்” கலந்து குடித்த 20 பேர்- 10 பேர் அவுட்

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் சானிடைசர் குடித்து 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த 10 நாட்களாக மதுக்கடைகள் மூடப்பட்டதால் 20க்கும் மேற்பட்டவர்கள் போதைக்காக சானிடைசரை குடித்ததாக கூறப்படுகிறது. தன்னார்வலர்கள் வழங்கிய சானிடைசரை சாராயத்துடன் கலந்து குடித்து உள்ளனர். இந்த சம்பவம் கடந்த 4 நாட்களுக்கு முன் நடந்து உள்ளது.

பாதிக்கபட்ட20 பேரும் மருத்துவமனையில் சேர்க்கபட்டனர்.அங்கு புதன் கிழமை ஒருவர் மரணமடைந்தார்.நேற்று வியாழக்கிழமை 3 பேர்  மரணமடைந்தனர். இன்று காலை சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது.