விருந்திற்கு ஏற்ற, சுவைக்கு உகந்த “அவல் பாயாசம்” – செய்முறை விளக்கம்…

தேவையான பொருட்கள்:

அவல் – 1/2 கப்

சர்க்கரை –  1/2 கப்

பால் – 2 கப்

ஏலக்காய் – 1

முந்திரிப்பருப்பு – 5

நெய் – 2 தேக்கரண்டி

உப்பு – சுவைகேற்ப

செய்முறை:

வாணலியில், நெய் ஊற்றி, முதலில் முந்திரியை பொன்னிறமாக, மிதமான தீயில் வறுத்து, தனியே எடுத்து வைக்கவும்.

அதே நெய்யில் அவலை பொரிந்து எடுக்கவும்.

பாலை ஒரு கனமான பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சி, அத்துடன் வறுத்த அவல், மற்றும் உப்பு சேர்த்து, மிதமான தீயில் பால் வற்றி, அவல் வேகும் வரை வைக்கவும்.

பின்னர்
1/2 கப் தண்ணீரில் சூடு செய்யவும். சர்க்கரை கரைந்தவுடன், ஒரு வடிகட்டியில் வடிகட்டி, வெந்த அவலில் சேர்த்து கலக்கவும்.

இறுதியாக ஏலக்காய், முந்திரி சேர்த்து கலந்து இறக்கவும்.

சர்க்கரை சேர்த்த 1 நிமிடத்தில் பாயசத்தை இறக்கிவிடவும்.

கொதிக்க வைக்க வேண்டாம்.

குறிப்பு

அவல் நன்கு வெந்தவுடன் தான் சர்க்கரை சேர்க்கவேண்டும். சர்க்கரை சேர்த்த பின் அவல் வேகாது.

இதே போல சீனி சேர்த்தும் செய்யலாம்.

Advertisements

பாலில் வேகவைக்காமல் தண்ணீரில் வேக வைத்து, பின் இறக்கும் முன் சிறிது பால் சேர்த்தும் செய்யலாம்.