தமிழகத்தில் “நவம்பரில் பள்ளிகள் திறப்பா”? பள்ளிக் கல்வித்துறை விளக்கம்…!!

இந்தியாவில் கொரொனா பரவல் அதிகரித்துள்ளது. நாள்தோறும் கொரொனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்களைப் பாதுக்காக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் சில தளர்வுகளுடன் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், ஊரடங்கால் பள்ளிகள் ஆன்லைன் வாயிலாக மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வருகிறது. எனவே பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என மக்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்ப்படும் என சமூக வலைதளங்களில் வெளியானட் செய்தி தவறானது எனப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை எனவும், சூழலைப் பொறுத்துதான் எப்போது பள்ளிகள் திறக்கபடும் என்பது அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.மேலும், பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என தெரிவிததுள்ளது.