மது “போதையில் தொந்தரவு” -கணவனை கொன்று குளிர் சாதன பெட்டியில் வைத்த மனைவி..!!

ரஷ்யாவில் மிகவும் பிரபலமான பாப் இசை பாடகர் அலெக்சாண்டர் யுஷ்கோ. இவர் தனது மனைவி மெரினா குஹாவுடன் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் வசித்து வந்துள்ளார் . உலகம் முழுவதும் கொரோனாவால் வீட்டில் முடங்கியுள்ள சூழலில் அலெக்சாண்டர் தினமும் குடித்து விட்டு தனது மனைவியை துன்புறுத்தியுள்ளார். இதனால் மன அழுத்தம் அடைந்த குஹா கணவனை கொன்றுவிட லாம் என முடிவு செய்து கத்தி, சுத்தியல், ரம்பம் உள்ளிட்டவை கொண்டு கணவரின் உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளார். தனது 2 வயது குழந்தையின் கண் முன்னே இந்த கொலையை செய்துள்ளார்.

பின்னர் வெட்டிய உடல் பாகங்களை வாஷிங் மெஷினில் போட்டு நன்கு கழுவி உப்பு போட்டு, ஃபிரிட்ஜில் வைத்துள்ளார். வீட்டை நன்றாக சுத்தம் செய்து விட்டு வழக்கம் போல் தனது வேலைகளை கவனிக்க ஆரம்பித்துள்ளார். இதற்கிடையில் அலெக்சாண்டருக்கு அவரது நண்பர்கள் போன் போட்டுள்ளனர். தொடர்ந்து அவர் எடுக்காததால் சந்தேகம் அடைந்த நண்பர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். வீட்டிற்கு விரைந்து வந்த போலீசார் குஹாவிடம் விசாரணை நடத்தியதில், கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் போதையில் டார்ச்சர் செய்ததால் தான் கொன்றதாகவும் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.

Related Posts