கடினமான உணவுகளை எளிதில் ஜீரணமாக்கும், “இஞ்சி” யின் மருத்துவ குணங்கள் உள்ளே..!!

நம் உடலில் சுரக்கும் மூன்று திரவங்கள் செரிமானத்துக்கு முக்கியமானவை. எச்சில், செரிமான அமிலம், கல்லீரலில் சுரக்கும் நொதியான பைல். இந்த மூன்று திரவங்களின் சுரப்பையும் இஞ்சி ஊக்குவிக்கும். கடினமான உணவுகளை கூட எளிதில் ஜீரணமாக்கும் தன்மை கொண்டது. 

இஞ்சியைத் தட்டி நீரில் போட்டு  கொதிக்க வைத்து இறக்கி, தேன் கலந்து பருக செரிமான பிரச்சனைகள் அகலும். அதிலும் காலையில் பருகினால், உங்கள் செரிமான மண்டலம் சுத்தமாகி அதன் செயல்பாடு அதிகரிக்கும்.  இஞ்சி குமட்டல் மற்றும் வாந்தி வருவதைத் தடுக்கும்.

அதுமட்டுமின்றி காலையில் ஏற்படும் சோர்வையும் இஞ்சி தடுக்கும். இஞ்சி பித்தத்தை தடுக்கக் கூடியது. எனவே இது வாந்தியை கட்டுப்படுத்தி வயிறு பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக் கும்.  ஒரு சிறிய துண்டு இஞ்சியை நசுக்கி தண்ணீரில் சேர்க்கவும்.

அதனுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும். இஞ்சி வயி ற்றின் எரிச்சலை போக்கி உடனடி நிவாரணத்தை கொடுக்கும்.  சளி, இருமல், ஜலதோஷம் இருப்பவர்களுக்கு கைகண்ட மருந்து இஞ்சி. இது குளிர் காலத்தில் வெப்பம் தரும் உணவுகளில் ஒன்றாகும். ஒரு கப் இஞ்சி டீ அருந்தினால் அது உங்கள் உடல் நலத்தை சீராக வைத்திருக்கும். 

Advertisements

இஞ்சியை தினமும் உணவில் சேர்த்து வர இன்சுலின் சுரப்பை அதிகரித்து இரத்த சர்க்கரை அளவை கட்டுப் பாட்டில் வைக்கிறது . மதிய உணவுக்கு முன் இஞ்சி  ஜூஸ் உடன் பழச்சாறு கலந்து குடிக்கலாம். இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளன. இதனால் கல்லீரல் சுத்தம் செய்யப்பட்டு, ரத்த ஓட்டம் மேம்படுத்தப்படும்.