ரயில்வே துறையை, தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிடுக..!! ரயில்வே பணியாளர்கள் போராட்டம்…

கோவை:-

மத்திய அரசு தொழிலாளர்களின் விரோத போக்கை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு புதிய புதிய திட்டங்களை அமுல் படுத்தி வருவதாகவும், அதில் ரயில்வே பணியாளர்களை வஞ்சிக்க வேண்டும் என்ற நோக்கில் இரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதாவும், தெரிவித்து கோவை ரயில்வே பணிமனையில் சேலம் கோட்ட எஸ்ஆர்எம் யூ அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்தை கைவிடக் கோரியும், இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் எந்த அளவுக்கு முக்கியமானதோ , அதேபோல் ரயில்வே துறையும் முக்கியமான துறை, என்று, ரயில்வே பணியாளர்களுக்கு ராணுவத்தில் கிடைக்கும் அந்தஸ்துகள், மதிப்புகள், அனைத்தும், கிடைக்கப்பெற வேண்டும் என கண்டன முழக்கங்களை கோஷங்களாக எழுப்பினர்.

மேலும் எஸ்ஆர்எம் யூ பேரியக்கத்தின் பொதுச் செயலாளராகவும், ஏஐஆர்எப் இன் செயல் தலைவராக உள்ள கண்ணையா அவர்களின் வேண்டுகோளை ஏற்று, இன்று தமிழகம் முழுவதும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருவதாகவும், எங்களது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காவிட்டால், கண்ணையா அவர்களின் அடுத்தகட்ட அறிவிப்புக்கு முழுமனதோடு காத்திருப்பதாகவும்,  எந்த கட்ட போராட்டமாக இருந்தாலும் சந்திக்க தயாராக இருப்பதாக ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக தெரிவித்தனர் பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.