“பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி” உடல்நிலை தொடந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள் தகவல்…

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடல்நிலை கவலைக் கிடமாக உள்ளதாக டெல்லி ராணுவ மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை 12.07 மணிக்கு அனுமதிக் கப்பட்ட பிரணாப் முகர்ஜிக்கு, மூளையில் கட்டி இருந்ததை அடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல்நிலை சற்று மோசமாக உள்ளதாகவும், தற்போது செயற்கை சுவாசம் அவருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்ட வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், அவரது உடல் நிலையை தொடர்ந்து உற்றுக் கண்காணித்து வருவதாகவும் ராணுவ மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.