“சுதந்திர தின விழா” வை சீர்குலைக்க சதி- மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை!!…

இலங்கை, மாலத்தீவு மற்றும் கேரளா வழியாக, தமிழகத்திற்குள், பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டமிட்டுள்ளனர். அவர்கள் தமிழகத் தில், சுதந்திர தின விழாவை சீர்குலைக்க சதி திட்டம் தீட்டியுள்ளனர். வழிபாட்டு தலங்களை தகர்க்கவும் முடிவு செய்துள்ளனர். அவர்க ளின், தற்கொலை படை தாக்குதல் பட்டியலில், சில அமைச்சர்கள் உள்ளிட்ட, முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் இடம் பெற்று இருப்பதாக, மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. சென்னையில், தலைமை செயலகம், விமான நிலையம், ரயில் நிலையங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு, போலீஸ் பாது காப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதிகளில், போலீஸ் ரோந்து பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் உள் ளிட்ட, வி.ஐ.பி.,க்களுக்கு, பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

அத்துடன், சென்னை, திருவொற்றியூரியில் இருந்து ராமேஸ்வரம் வரை, கடலோர பகுதிகள், போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. மணலில் சீறிப்பாயும் வாகனங்களில், கடலோர பாதுகாப்பு படை போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலம் முழுதும், வாகன சோதனை கடுமையாக்கப்பட்டு உள்ளது. மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில், தற்காலிகமாக, கூடுதலாக, சோதனை சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், ‘சுதந்திர தின விழாவுக்கு, இன்னும் மூன்று தினங்களே இருப்பதாலும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன’

இவ்வாறு அவர் கூறினார்.