“நீங்க நடத்துங்க… நான் தூங்குறேன்”- ஆன்லைன் வகுப்பில் மல்லாக்க படுத்து உறங்கிய மாணவன்…!!!

கொரோனாவால் ஆன்லைன் கல்வி மூலம் படிக்கும் போது குழந்தைகளின் சேட்டைகள் குறித்தான பல வீடியோக்களும், புகைப்படங்களும் பரவி வைரலாகி வருகின்றனர். அதுமட்டுமில் லாமல் குழந்தைகளின் குடும்பத்தார் வீட்டுப்பாடம் எழுதும் வீடியோக்களும் கூட சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது.

இப்போதும் அதேபோல் ஒரு சம்பவம் புகைப்படமாக்கப்பட்டு கிரா மெக்டோவெல் என்பவர் எனது மழலையர் பள்ளியின் மொத்த மனநிலை என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். Zoom வீடியோ மூலம் ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்தி கொண்டிருக்கும் போது சிறிது நேரம் கவனித்த மாணவன் நேரம் போக போக அந்த நாற்காலியில் மல்லாக்க படுத்துக்கொண்டான்.

இந்த புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது போன்ற தகவல்கள் இல்லை என்றாலும் உலக மாணவர்களின் நிலை இதுவாக இருக்ககூடும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தியாய் பரவி வருகின்றது.