பாஜக இணையதளம் தொடங்கியது இதற்கு தானா?” “கிசான் முறைகேடு விவகாரம்” கனிமொழி கேள்வி…

பிரதம மந்திரி கிசான் நிதியில் தமிழகத்தில் முறைகேடாக பலர் விண்ணப்பித்து பணம் பெற்றுள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. இது தொடர்பாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து தனது பேஸ்புக் பதிவில் கருத்து தெரிவித்துள்ள எம்.பி கனிமொழி “பிரதம மந்திரி கிசான் நிதி திட்டத்தின் மூலம் 110 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த முறைகேடு சம்பவங்கள் அனைத்தும் பொதுமுடக்க காலத்திற் குள்ளாக நடந்துள்ளன. வங்களில் கடன் பெற உதவுவதாக தமிழக பாஜக இணையதளம் தொடங்கியது இதற்குதானா?” என கேள்வி யெழுப்பியுள்ளார்.

மேலும் இந்த மோசடியில் 5 லட்சம் பயனாளர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ள கனிமொழி ஆளும் அதிமுக அரசின் உதவி இல்லாமல் இந்த மோசடி நடந்திருக்க முடியாது என குற்றம் சாட்டியுள்ளார்.