கோவை மாவட்டம் உட்பட 5 மாவட்டங்களில் “கொரோனா” தொற்று உச்சம் தொடும் -அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்…

ஊரடங்கு தளர்வுகள் அதிகமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் அடுத்த 15 நாட்களில் கோவை, திருவண்ணாமலை, நாகை, கடலூர், சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கொரோனா உச்சம் தொடும் என்றுள்ளார். 

மேலும், அந்த மாவட்டங்களில் மருத்துவ உட்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், சிவப்பு மண்டலங்களாக உருவாக வாய்ப்புள்ள 5 மாவட்டங்களில் பரிசோதனைகளை அதிகரித்துள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் அம்மாவட்டங்களில் நிலமை கட்டுக்குள் கொண்டு வரப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.