பாஜக ஆதரவு, நாங்க எதிர்க்கிறோம்..!! நீட் விவகாரத்தில் அமைச்சர் ஜெயகுமார் உறுதி…

தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நேற்று நடைபெற்று முடிந்துள்ள நிலையில், முன்னதாக நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெருமளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் பல நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்ய தொடங்கியுள்ளன.

இந்நிலையில் நீட் விவகாரம் குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் “தமிழகத்தில் நீட் தேர்வு வருவதற்கு காரணமே திமுகதான். நீட் பயத்தால் மாணவர்கள் உயிரிழக்க முக்கிய காரணம் திமுகதான், அன்றே அவர்கள் அதை தடுத்திருந்தால் இந்த விளைவுகள் ஏற்பட்டிருக்காது” என்று கூறியுள்ளார்.

மேலும் கூட்டணி கட்சியான பாஜக நீட்டை ஆதரிப்பது குறித்து பேசிய அவர் “பாஜக நீட்டுக்கு ஆதரவு தெரிவித்தாலும், அதிமுக நீட்டை தடை செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

Related Posts