“அதிமுக தலைமைக்கு உள்ள வெற்றிடத்தை சசிகலா நிரப்புவார்” – வெற்றிவேல் தகவல்…

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா 2021ம் ஆண்டு ஜனவரி 27ல் விடுதலை செய்யப்படுவார் என்ற தகவல் அமமுக வினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சசிகலா விடுதலை குறித்து பேசியுள்ள அமமுக பொருளாளர் வெற்றிவேல் “2021 ஜனவரி 27ம் தேதி வரைதான் சசிகலாவை சிறையில் வைத்திருக்க முடியும். ஆனால் அந்த குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே சசிகலா விடுதலையாகி வெளியே வந்து தீவிர அரசியலில் ஈடுபடுவார்” என்று கூறியுள்ளார்.

மேலும் “அதிமுக தலைமைக்கு உள்ள வெற்றிடத்தை சசிகலா நிரப்புவார்” என்றும் கூறியுள்ளார்.

Related Posts