“வேளாண் மசோதாவுக்கு” எதிர்ப்பு..!! மாவட்ட தலை நகரங்களில் போராட்டம் – மு.க.ஸ்டாலின் தலைமையில் முடிவு…

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததற்கு இடையே ஏற்கனவே 2 முறை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தினார். அதில், கொரோனா நிவாரணம், நீட் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டன. தற்போது, 3-வது முறையாக சென்னை அண்ணா அறிவாலய த்திலேயே இன்று   தோழமை கட்சிகளின் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.  இந்த ஆலோசனைக்குப் பிறகு, வேளாண் மசோதாவுக்கு எதிராக வரும் 28 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் தோழமை கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்த முடிவு  செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.