விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு ஒட்டுமொத்தமாக நிறைவு!!

சென்னை:
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு ஒட்டுமொத்தமாக நிறைவடைந்துள்ளது.

இந்திப் படமான ‘தேரே இஸ்க் மெயின்’ படப்பிடிப்பை முடித்துவிட்டு, தமிழில் விக்னேஷ் ராஜா இயக்கும் படத்தில் கவனம் செலுத்த தொடங்கினார் தனுஷ்.

வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்தினை ஒரே கட்டமாக முடித்துள்ளது படக்குழு. இதனை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

கோடை விடுமுறைக்கு வெளியிடும் வகையில் இதன் இறுதிகட்டப் பணிகளை துரிதப்படுத்தி வருகிறது படக்குழு.

தனுஷ் – விக்னேஷ் ராஜா படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. புத்தாண்டை முன்னிட்டு இதன் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு.

இதில் மமிதா பைஜு நாயகியாக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் நடத்தியுள்ளது படக்குழு.

விக்னேஷ் ராஜா படத்தை முடித்துவிட்டதால், ராஜ்குமார் பெரியசாமி படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க முடிவு செய்திருக்கிறார் தனுஷ். இப்படத்தினை முதலில் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது.

தற்போது தனுஷின் வுண்டர்பார் நிறுவனமே பெரும் பொருட்செலவினை தயாரிக்கவுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *