விசுவாவசு ஆண்டு மார்கழி-25 (வியாழக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சஷ்டி காலை 11.23 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம் : உத்திரம் இரவு 6.06 மணி வரை பிறகு அஸ்தம்
யோகம் : சித்த/அமிர்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான கிளி வாகன சேவை
தேய்பிறை சஷ்டி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். இயற்பகை நாயனார் குருபூஜை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ முருகன் புறப்பாடு. லால்குடி ஸ்ரீ பெருந்திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் திருக்கோவிலில் காலை அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வேங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை தலங்களில் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான கிளி வாகன சேவை. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் தலங்களில் காலை சிறப்பு பால் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உற்சாகம்
ரிஷபம்-வரவு
மிதுனம்-ஆர்வம்
கடகம்-வெற்றி
சிம்மம்-ஆதரவு
கன்னி-பக்தி
துலாம்- நன்மை
விருச்சிகம்-சாந்தம்
தனுசு- பரிசு
மகரம்-உழைப்பு
கும்பம்-பெருமை
மீனம்-கடமை